amutha malai polikirathu

திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஈழப்புயல்கள் கலைக்கூடம் தயாரித்து வழங்கும்..... இரா சேகரின்இரா சேகர் இசையிலும் ஈழப்பிரியனின் வரிகளிலும் நிரோயனின் குரலிலும் . மிதுனாவின் Mithuna Mithu இயக்கத்திலும் அருளின் Arul Anand NA உதவி இயக்கத்திலும் தயாரிப்பு நிர்வாகம் ஜீவன் Gnanasekaram Jeevan எனது Siddhu Sinthujan மற்றும் ரேகாவின் Mireka Saku நடிப்பிலும் ரமேஸின் ஒளிப்பதிவிலும் சசிகரனின் Sasikaran Yo ஒளித்தொகுப்பிலும் உருவாகிவரும் "உயிரே வா" கானொளி பாடல் வெகுவிரைவில் வெளியாக இருப்பதால்.. அனைவரும் உங்கள் ஆதரவைத்தந்து உதவுங்கள்... Location help to robin Robin Ultimat ...Special thanks to robin and pubuthu Shiron Menaka.. Krish and thanuஞாயிறு, 24 ஜனவரி, 2016

யாழ்குடாநாட்டின் உச்சியில் சூடிய சூழாமணியென இத்தனை திருக்களும் நிறைந்த வல்வெட்டித்துறைக் கடற்கரையில் 27.02.1937ம் தினம் அன்னபூரணி தன் கடல் பயணத்தைத் தொடங்கக் காத்து நிற்கிறாள். திரை கடலோடித் திரவியம் தேடு என்பதே வழக்கம். ஆனால் இங்கே இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்கள் திரவியத்தை மட்டுமே தேடிப்போவதில்லை. மன்னுயிர் காக்கும் அன்னத்தை யும் தேடித் திரட்டி வந்து அரிசி மூடைகளாக இறக்கும். ஆதலால்தானோ இதற்கு அன்னபூரணி எனப் பெயர்சூட்டி உள்ளனர் எனப் பலரும் வியக்க நின்ற நாவாய் கடலைக் கிழித்து மேற்திசை நோக்கிப்போக நகர்ந்தது.

மேற்திசை நோக்கிய பயணம்:- கண்ணுக்கு எட்டும் மட்டும் அன்னபூரணியின் கடற்பயணத்தை கவனித்தவர்கள் பார்வையில் இருந்து படிப்படியாக மறைந்ததும் அதில் செல்லும் கடலோடிகளின் மனைவி மக்கள் மனதில் நாளுக்கு நாள் துயரம் நிறைகின்றது. விழிநீர் வெள்ளம் வற்றாத வாய்க்காலாக மாறுகின்றது. எண்ணத் திரையிலிருந்து மங்கிப்போன அன்னபூரணி அமெரிக்க கனேடிய வடகிழக்கு எல்லைக்கு சொற்ப தொலைவிலுள்ள குளோசெஸ்டர் (Gloucester) துறை முகத்துள் நுழைந்து நங்கூரமிட்டு தனது பயணத்தை முடித்த பெருமிதத்துடன் நிற்கின்றது. இலங்கையிலிருந்து அன்னபூரணி அம்மாள் என்ற செய்தி மசாசுசெற்ஸ் (Massachusetts) மாநிலத்தில் பத்திரிகைச் செய்தியாக வருகின்றது. கப்பலை செலுத்தி வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்ததினம் 1.08.1938 எனக்குறித்துக் கொள்கிறார்கள். தமது கடற்பயணத்தை ஒன்றரை வருடப் பயணம், 18 மாதம், 72 வாரம், 540 நாட்களாகிவிட்டன என நினைத்தாலும் தமக்கு அபயம் தந்த வல்வெட்டித்துறைத் தெய்வமே என தம் சிரம் தாழ்த்திக் கரங்கூப்பி வணங்குகின்றனர்.

இது ஓர் பூர்வசென்ம பந்தம்
:- அன்னபூரணிப் பாய்க்கப்பல் இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்க ளுக்கு முன்பு நுழைந்த துறைமுகம் உள்ள மாநிலத்திற்கும் (மசாசுசெட்ஸ்) ஈழத்தமிழருக்கும் அதன்பின்னர் 1980களில் இருந்த தொடர்புகளையும் நாமும், உலகும் அறியும். நிறத்தால், குலத்தால், மொழியால் சமயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள் வாழும் மாநில அரசவையில் ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை அறிந்து சுதந்திரத்தை இழந்த மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர் கூட்டணித் தலைவர் அண்ணன் சிவசிதம்பரம் அவர்களை வரவழைத்து அடையாளமாக அதன் தீர்மான திறப்பை வழங்கினார்கள். அதன்பின்னர் தான் உலகநாடுகள் இமைகளை இடுக்கியாவது ஈழத்தைப் பார்க்க ஆரம்பித்தன. இந்தப் பரிவுக் கும் அன்னபூரணி அந்த மாநிலத்தே நுழைந்த முன்நிகழ்வுக்கும் இடையில் ஏதோ ஓர் பூர்வசென்ம பந்தம் உள்ளதோ எனத் தோன்றுகின்றது.

அன்னபூரணியின் மேற்கத்திய பயணம் :- 'இன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்குள், நான் பிறந்து வளர்ந்த நாட்டில் வாழ் ஈழத்தமிழர்களுக்கு பெரும்பான்மை இனத்தவரால் பெரும் துன்பம் ஏற்பட இருக்கிறது. அப்போது நீவிர்தான் அவர்களுக்குப் புகலிடம் தரவேண்டும்". என்ற வேண்டுகோளை முன்பாகவே உன்னிடம் சமர்ப்பிக்க வந்துள்ளேன் என்பது போலவே அன்று தனது பாய்களை இறக்கிவைத்து வணக்கம் செய்தாளோ வேம்புடல் கொண்ட அன்னபூரணி அன்னை என்று கற்பனை செய்தாலும் அது முற்றுப்பெற்ற உண்மை என்பதை இன்று உணர்கின்றோம். பிறந்த கத்திற்கு புகழ் தேடித்தந்த அன்னபூரணி முழுத்தமிழினத்திற்கும்; இலங்கைக்கும் புகழ் தேடித்தந்த தமிழர்தம் கடலாளுமையை விளக்கும் அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்து வந்துள்ளாள். அன்னபூரணி குளோசெஸ்டர் துறைமுகத்தில் நுழைந்ததும் அந்த நிகழ்வு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொஸ்டன் குளோப் என்னும் நாளிதழ் 1938ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் தினத்தன்று (அப்போது அதன்விலை 2 சதம்கள்) வெளியிட்ட செய்தியின் தலைப்பு: பிறிகன்ரைன் முடித்த கடல் பயணம் இலங்கையில் இருந்து வந்த அற்புதமான நிகழ்ச்சி கடல் பயணத்தைப் பற்றிய அரிய தகவல்கள். எழுதுவது: நாற் ஏ.வறோஸ்.

89அடி நீளமான புளோரன்ஸ் சி றொபின்சன் என்னும் பிறிகன்ரைன் ரக (அன்னபூரணியின் புதிய பெயர்) பாய்கப்பல் ஒன்று குளொசெஸ்டர் துறைமுகத்தை அண்மித்து நங்கூரம் இட்டு உள்ளது.

 • அன்னபூரணி பாய்க்கப்பலின் நிழற்படத்துடனான வருகை பற்றிய செய்தி
 • அன்னபூரணிப்பாய்க்கப்பல் யாருக்காகயாரால் வல்வெட்டித்துறையிலிருந்து தருவிக்கப்பட்டதோ அவரது வரலாறு.
 • அன்னபூரணியை இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் ஆகிய இரு சமுத்திரங்களுடா கவும், அவற்றுக்கு இடைப்பட்ட வங்கக்கடல், அரபுக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல், பேர்மி யூடாக்கடல், ஆகிய கடல்களுக்கூடாகவும் செலுத்திவந்த திறனும், விறலும் மிக்கவல்வெட்டித் துறைக் கப்பலோட்டிகள் பற்றியது.
பாய்களின் உதவியுடன் மட்டும் மேற்குச் சமுத்திரங்களில் பயணித்த கடைசி மொத்தகாற்று வழிக் கலம் இதுவேஎனலாம். சூறாவளிகள், புயல்கள், தாகம், உணவுப் பற்றாக்குறை என்பவற் றின் மத்தியில், சிதைந்து போகத்தக்க பல அபாய நிலைகளைக் கடந்துவந்த இந்தக் கப்பலின் மேற்தளத்தில், அந்த மதியவேளையில் ஒரு முதிய குளொசெஸ்டர் வாசி, தலைப்பாகை, வேட்டி அணிந்த இலங்கையரான ஐந்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இந்துக்கடலோடிகள் கனகரெத் தினம்.தம்பிப்பிள்ளை, அகவை48, தண்டையல் சின்னத்தம்பி.சிதம்பரப்பிள்ளை, அகவை28. தாமோ திரம்பிள்ளை.சபாரெத்தினம், அகவை28. பூரணவேலுப்பிள்ளை.சுப்பிரமணியம், அகவை29, ஐயாத் துரை.இரத்தினசாமி, அகவை24. என்பவர் என பலசெய்திகளை அந்தப்பத்திரிகை வெளியிட்டிருந் தது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆங்கிலேயரிடம் இருந்து சுதேச கப்பல் வணிகத்தை ஆரம்பித்த சம காலத்தில் வல்வெட்டித்துறையில் கட்டிய அன்னபூரணியை அமெரிக்கர் ஒருவர் கொள்வனவு செய்ததையும், அதைத் தனது நாட்டிற்குக் கொண்டு சென்றதையும் ஒப்பிட்டுப் பார்த் தால் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் மிகமிகக் கெட்டிக்காரர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

சாகரம் கடல்கடந்தாய் - வாழி அன்னபூரணி
உசாத்துணை நூல்கள்:-
 1. ஈழத்துப் பூராடனாரின் 'வல்வெட்டித்துறைக் கடலோடிகள்"
 2. 'வல்வெட்டித்துறையின் வரலாறு" வித்துவான் வ.மு.கனகசுந்தரம்.
 3. 'வல்வெட்டித்துறை ஊரின்னிசை" திரு.பூ.க.முத்துக்குமாரசாமி, திரு.செ.வைத்தியலிங்கம்பிள்ளை.
 4. 'வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டியதமிழர்கள்" திரு.நு.மு.இராஜகோபால்.
 5. 1974 தமிழாராய்ச்சி மாநாடு அன்னபூரணி ஊர்தி பவனி விசேட மலர்.
 6. 'வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" வல்வை ந.நகுலசிகாமணி. 2ம் பதிப்பு 2006.
 7. 'வரலாற்றில் வல்வெட்டித்துறை" திரு.பா.மீனாட்சிசுந்தரம், திரு.ந.சீவரத்தினம்.
 8. 'Daily Times" August 2nd 1938.
 9. Reopening of a North Ceylon port, page 8 to 20
From www.vvthistory.com

திங்கள், 13 ஏப்ரல், 2015

விஞ்ஞான வளர்சிகள் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில்  விஞ்ஞான ஆராய்சிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட விதத்தில் இன்றைய உலகிற்கு சவால் விட்டுக் கொண்டு காத்திருப்பது தான் "பேர்முடா முக்கோண வலயம்". 
பேர்முடா முக்கோண வலயம் எனக் கூறப்படும் இந்த கடல்பரப்பானது ஏறத்தாள  500000  தொடக்கம் 1.5 மில்லியன் பரப்பளவு உடையது. அது மட்டுமல்லாது இது வடஅமெரிக்காவின் தென் பகுதியை அண்மித்த புளோரிடாவையும் அதிலிருந்து தென்மேற்காக போட்டோரிக்கோ மற்றும் தென்கிழக்காக பேர்முடா தீவு என்பனவற்றையே எல்லைகளாகக் கொண்டுள்ளது. இவை வெறும் கற்பனை எல்லைகளாகும். 
பல ஆண்டாண்டு காலமாக இந்தப் பகுதிக்குள் வரும் அதிக எண்ணிக்கையான கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொலைந்து போனமை உட்பட 200க்கும் அதிகமான சம்பவங்களை அடுத்து 1964 ஆம் ஆண்டு வி. கடிஸ் என்ற எழுத்தாளர் ஆகொஷி புனைகதை சஞ்சிகையொன்றுக்கு எழுதிய ஆக்கத்தில் முதல் முதலாக இப்பிரதேசத்தை பேர்முடா முக்கோண வலயம் என்று பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு சார்ல்ஸ் பேளிட்ஸ் என்பவர் எழுதிய பெர்முடாவின் முக்கோணம் என்ற புத்தகம் மக்களின் இது தொடர்பான ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது எனலாம். 

பெர்முடா கடல்பரப்பில் நடந்த பிரபலமான சம்பவங்கள் உங்களுக்காக:        

1492 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் நாடுகாண் பிரயாணத்தில் ஈடுபடிருக்கையில் இந்தப் பிராந்தியத்தை கடக்கும் போது வானத்தில் சில மர்மமான வெளிச்சங்களை அவதானித்து உள்ளார்கள்.  இதனை தனது நாட்குறிப்பில் கொலம்பஸ் "வானத்திலிருந்து நெருப்புக் குழம்பு போன்று விழுவதைக் கண்டேன். அது எரி நட்சத்திரமாகவும் இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்,

பெர்முடா தளத்தில் நடந்த இன்னொரு சுவடு 1892 ஆம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து 400 மைல் தொலைவில் கடலுக்கடியில் தொலைந்துபோன  Celeste எனும் கப்பலாகும். இது ஜெனோவா நோக்கிப் புறப்படிருந்தது. திடீரென மாயமாக மறைந்த இக்கப்பலின் 10 கொண்ட மாலுமிகள் பற்றிய தகவல் இதுவரை மர்மமாகவே உள்ளது. ஆனால் இக்கப்பல் போர்த்துக்கல் கரைகளில் வெறுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இப்பிரதேசத்தை மாயஜாலமாக காட்டியது

மேலும் இந்த மர்மத் தொடரில் உலகை தன் பக்கம் திருப்பிய நிகழ்வு 1945 ஆம் ஆண்டில் நடந்த Flight 19 என்று சொல்லப்படுகின்ற 5 குண்டுவீச்சு விமானங்களின் திடீர் மறைவாகும். புளோரிடா கடற்தள விமானத் தளத்திலிருந்து 5 யுத்த குண்டுவீச்சு விமானங்கள் தமது வழமையான பயிற்சிக்காக புறப்பட்டன. இந்த விமான ஓட்டப்பாதை 160 மைல்கள் கிழக்காகவும், 40 மைல்கள் வடக்காகவும் பறந்து பின் ஆரம்ப தளத்துக்கு திரும்புவதாக அமைக்கப்பட்டிருந்தது. இவை அமெரிக்காவின் அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ள விமானங்களாகும். இவர்கள் அனுபவமற்ற பயிலுனர் விமானிகளாவர். ஒவ்வொன்றிலும் 3 பேர் வீதமும், ஒன்றில் 2 பேரும் பயணித்தனர். இவர்களை வழிநடத்திச் சென்ற லெப்டினன்ட் சார்ல்ஸ் டேய்லர் என்ற விமானியே அன்பவமுள்ள விமானியாவார்.        

முதலாவது விமானம் பி.ப 2:02 க்கு புறப்பட்டது. அப்பொழுது அது மணிக்கு 200 கீ.மீ வேகத்தில் பறப்பதாக செய்தி அனுப்பியது. ஏறத்தாழ ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பிறகு விமானத்தில் கோளாறு என்றொரு சமிக்ஞை வந்தது. குறிப்பிட திட்டப்படி இது விமானம் தளத்திற்கு திரும்பி வந்திருக்க வேண்டிய நேரமாகும். விமானத் தளபதியிடமிருந்து குழப்பமான செய்தி ஒன்று வந்தது. "விமான கட்டுபாடு மையத்துக்கு, நாம் பாதை தவறிவிட்டோம்; தரைப்பாதை எதுவும் எமது பார்வை மட்டத்தில் இல்லை". "நீங்கள் இப்போது எங்கு பறந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்ட போது "எங்களால் எதுவும் தெளிவாகக் கூற முடியவில்லை " என்ற செய்திகளே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தன.  "மேற்கு நோக்கிப் பறவுங்கள்" என்று கூறப்பட போது "எங்களால் எது மேற்கு, கிழக்கு என்று புரியவில்லை; எல்லாமே புதிராக இருக்கிறது" என்று செய்தி வந்தது. பினர் விமானத்தினுள் விமானிகள் அலறும் சத்தம் விமானக் கட்டுப்பாடு மையத்தில் உணரக்கூடியதாக இருந்தது. பி.ப. 2:45 மணியளவில் "எமது இடத்தை குறிப்பாக தெரிவிக்க முடியவில்லை எனினும் விமானத்தளத்திலிருந்து ஏறத்தாழ 225 மைல்களில் பறந்து கொண்டிருக்கிறோம்" என்ற செய்தி பதிவாகியது. உடனடியாக 13 பேர் கொண்ட மீட்புக்குழு குண்டுவீச்சு விமானங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டது. 5 நிமிடங்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட நிலையில் மீட்புக்குழுவும் மாயமாக மறைந்துவிட்டது. உடனடியாக கடற்படை, விமானப்படை என்பன குறித்த கடல்பரப்பில் தீவிர தேடுதல் நடத்தின.  Flight 19 விமானங்கள் ஐந்தையும், மீட்புக்குழு சென்ற விமானத்தையும் சகல இடங்களில் வலை வீசித் தேடியும் அவற்றின் சிறு துரும்பு கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அழிந்து போன விமானங்களின் பகுதிகள் கூட கடல்பரப்பில் மிதக்கவில்லை.  

இவ்வாறு உலகினை உலுக்கிய பல சம்பவங்களை தன்னகத்தே கொண்ட பேர்முடா முக்கோண வலயமானது இன்றுவரைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது என்பது மறுக்கவோ, மறக்கவோ முடியாத ஒரு விடயமாகும்.  

இனிவரும் காலங்களிலாவது இதன் புதிர் முடிச்சு அவிழுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   

Article 2

அத்திலாந்திக் சமுத்திரத்தில் கரீபியன் கடலையடுத்து மேற்கிந்தியத் தீவுகளான கியுபா, யமேக்கா, போட்டோஷிக்கோ முதலான தீவுகளுக்கு வடக்கே ஒரு முக்கோணப் பரப்பு அதிசயங்களையும் பயங்கரங்களையும் உள்ளடக்கிய பிரதேசமாக விளங்கி வருகின்றது. U.S.A  இன் புளோரிடாக்குடா நாடு, போட்டோஷிக்கோ தீவு, பேர்முடாதீவு ஆகிய மூன்றிடங்களும் இணைந்து இவ் மர்மம் புதைந்த முக்கோணி உருவாகின்றது. ஏறத்தாள 40 இலட்சம் சதுர km சமுத்திர நீர்ப்பரப்பினை பேர்முடா முக்கோணி உள்ளடக்கியது.

பேர்முடா முக்கோண பிரதேசத்தினுள் நுழையும் கப்பல்கள் எங்கு சென்றன என்று அறிய முடியாத விதத்தில் மறைந்து போயினவாம். கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு மேல் ஐம்பதுக்கும் மேற்பட்ட கப்பல்களும் இருபதுக்கும் அதிகமான விமானங்களும் வந்த சுவடே தெரியாமல் மாயமாக மறைந்து போயின. இதன் பின் இவ் முக்கோணம் “Devils Triangle” (பிசாசு முக்கோணி ) என அழைக்கப்பட்டது. இந்த முக்கோண பரப்பினுள் அடங்குகின்ற தீவுக்கூட்டங்கள் பலவாகும். புளோரிடாவையும் இணைக்கும் கோட்டில் பகமாத்தீவுகள் உள்ளன. முக்கோண பிரதேசத்தினுள் ஒரு முனையான பேர்முடாத்தீவு 16ம் Áற்றாண்டு “யுவான் பேர்முடா” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பேர்முடாத்தீவுக்கூட்டத்தில் சுமார் 360 மிகச்சிறிய தீவுகள் உள்ளன.அமெரிக்காவின் கபீர் படைத்தளங்களுள்ளன. எனவே தீவுகூட்டங்களை எல்லையாக கொண்டே பேர்முடா மர்மப் பிரதேசமாகவே உள்ளது. முதன்முதலில் 1945இல் பேர்முடாமுக்கோணிக்கு மேல் வானத்தில் பறந்த ஐந்து குண்டு வீச்சு விமானங்கள் காணமல் போயுள்ளன. இந்த மறைவுடன் எல்லோரதும் கவனத்தை பேர்முடாமுக்கோணி கவர்ந்தது. இதை தொடர்ந்து பல வதந்திகள் பரவின. 1968 மே மாதம் U.S.A இன் நீர்மூழ்கிக்கப்பல் “ஸ்கோப்பியன்” பேர்முடா முக்கோணியினுள் காணாமல் போயுள்ளது. இதனால் ஓய்ந்திருந்த பேர்முடா முக்கோணியின் மர்மம் மேலும் புத்துயிர் பெற்றது. இதற்கு பல காரணங்கள் கூறியும் எதுவுமே திருப்தியளிக்கவில்லை.
எனினும்
1. குடாநீரோட்டமெனப்படும் அத்திலாந்திக் நகர்வு என்ற வெப்ப நீரோட்டம் பாய்கிறது.சமுத்திர அடியில் அதேபோன்ற வேகமான நீரோட்டங்களுள்ளன. இவை கப்பல்களின் மறைவிற்கு காரணமாகின்றன.
2. பேர்முடா பிரதேசம் கரீபியன் கபிர் பகுதியாகும்.இப்பகுதியில் ஹரிக்கேன் எனப்படும் சூறாவளி அடிக்கடி வீசுவதால் கப்பல்களையும் விமானங்களையும் இழுத்துச்சென்று அழித்துவிடுகின்றன.
3. பேர்முடா முக்கோண பிரதேசத்தில் நீர் சுழிகளோடு கூடிய “டொனாடோ” எனப்படும் நீர்த்தம்பங்கள் உருவாகின்றன. அவை கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கிவிடுகின்றன. காரணம் மேற்கூறியவற்றில் ஒன்றா? அல்லது இவையனைத்தும் சேர்ந்து ஒன்றா?அயல்கிரகவாசிகளை பற்றிய பட்டிமன்றம் கடந்த சில மாதங்களாகவே உலக அறிவியல் அரங்கில் சூடுபிடித்து இருக்கிறது. இதில் இன்னும் சூடேற்றியிருக்கிறார் அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா'வின் தலைமை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபான். மனிதர்கள் வசிக்க உகந்த கிரகங்களையும், வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா என்பதை பற்றியும் செவ்வாயன்று நடந்த ஒரு கருத்தரங்கில், 'பூமிக்கு அப்பால் உயிர்கள் இருக்கிறதா என்பதை பற்றி இன்னும் பத்து ஆண்டுகளில் அறிகுறிகள் தெரிந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குள் திட்டவட்டமான ஆதாரங்களும் கிடைத்துவிடும்' என்று எல்லன் தெரிவித்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. 'எங்களுக்கு எங்கே தேடவேண்டும்; எப்படி தேடவேண்டும் என்பது தெரியும். அதற்கு தேவையான பெரும்பாலான தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கிறது. அவற்றை களமிறக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் நிச்சயம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்' என்று அழுத்தம் திருத்தமாக எல்லன் பேசியிருக்கிறார்.

இந்த அகண்ட பேரண்டத்தில், பூமியை ஒத்திருக்கும் பல கிரகங்கள் இருப்பது நமக்கு பல ஆண்டுகளாகவே தெரிந்ததுதான். உதாரணத்திற்கு, சனி கிரகத்தின் துணை கிரகமான என்செலாடசில் நீர் இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் வந்தபடி இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தில் முன் உப்பு நீர் கடல் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
2020ல் நாசா, அடுத்த செவ்வாய் ஆராய்ச்சி வாகனத்தை அனுப்பவிருக்கிறது. செவ்வாயில் முன் உயிர்கள் இருந்தனவா என்பதை ஆராய்ந்து, செவ்வாயின் மண், கல், நீர் குறித்த ஆதாரங்கள் போன்றவற்றை பூமிக்கு திரும்ப எடுத்துவரும் வகையில் அந்த வாகனம் வடிவமைக்கப்படவிருக்கிறது. இதையடுத்து, 2030ல் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

மனிதர்கள் வாழ ஏற்ற வேறு கிரகம் தேடுவதில் வெற்றி கிடைக்கும் என்பதை ஏற்கும் விஞ்ஞானிகள்கூட, வேற்று கிரகவாசிகள் இருப்பதை மறுத்து வருகின்றனர். தவிர, வேற்றுகிரகவாசிகளை பிடித்து வைத்து ஆராய்ச்சி செய்தது என்பது போன்ற 'சதி கதைகள்' பல உலவும் நிலையில், தலைமை விஞ்ஞானியே இப்படி அறிவித்திருப்பது விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக நம்பும் முகாம், இப்போது, 'நாங்க அப்பவே சொல்லல?' என்று ஹை பைவ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

வியாழன், 13 மார்ச், 2014


உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும்.
எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி. ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ்களை தமிழ் போல்டு ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.

எலுமிச்சை ஜூஸ்

தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்

தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்

பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

செவ்வாய், 14 மே, 2013

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு


பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.
தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம் அதிகரிக்குமாம்.

ரத்த ஓட்டம் சீராகும்
செக்ஸ் உறவின் கிளைமேக்ஸில் பெண்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் உணர்வுகளால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

குணமடையும் இதயநோய்கள்
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு நன்மைகள் பல ஏற்படுகிறது.

பின்பற்றுபவர்கள்