amutha malai polikirathu
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஏப்ரல், 2015


அயல்கிரகவாசிகளை பற்றிய பட்டிமன்றம் கடந்த சில மாதங்களாகவே உலக அறிவியல் அரங்கில் சூடுபிடித்து இருக்கிறது. இதில் இன்னும் சூடேற்றியிருக்கிறார் அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா'வின் தலைமை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபான். மனிதர்கள் வசிக்க உகந்த கிரகங்களையும், வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா என்பதை பற்றியும் செவ்வாயன்று நடந்த ஒரு கருத்தரங்கில், 'பூமிக்கு அப்பால் உயிர்கள் இருக்கிறதா என்பதை பற்றி இன்னும் பத்து ஆண்டுகளில் அறிகுறிகள் தெரிந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குள் திட்டவட்டமான ஆதாரங்களும் கிடைத்துவிடும்' என்று எல்லன் தெரிவித்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. 'எங்களுக்கு எங்கே தேடவேண்டும்; எப்படி தேடவேண்டும் என்பது தெரியும். அதற்கு தேவையான பெரும்பாலான தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கிறது. அவற்றை களமிறக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் நிச்சயம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்' என்று அழுத்தம் திருத்தமாக எல்லன் பேசியிருக்கிறார்.

இந்த அகண்ட பேரண்டத்தில், பூமியை ஒத்திருக்கும் பல கிரகங்கள் இருப்பது நமக்கு பல ஆண்டுகளாகவே தெரிந்ததுதான். உதாரணத்திற்கு, சனி கிரகத்தின் துணை கிரகமான என்செலாடசில் நீர் இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் வந்தபடி இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தில் முன் உப்பு நீர் கடல் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
2020ல் நாசா, அடுத்த செவ்வாய் ஆராய்ச்சி வாகனத்தை அனுப்பவிருக்கிறது. செவ்வாயில் முன் உயிர்கள் இருந்தனவா என்பதை ஆராய்ந்து, செவ்வாயின் மண், கல், நீர் குறித்த ஆதாரங்கள் போன்றவற்றை பூமிக்கு திரும்ப எடுத்துவரும் வகையில் அந்த வாகனம் வடிவமைக்கப்படவிருக்கிறது. இதையடுத்து, 2030ல் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

மனிதர்கள் வாழ ஏற்ற வேறு கிரகம் தேடுவதில் வெற்றி கிடைக்கும் என்பதை ஏற்கும் விஞ்ஞானிகள்கூட, வேற்று கிரகவாசிகள் இருப்பதை மறுத்து வருகின்றனர். தவிர, வேற்றுகிரகவாசிகளை பிடித்து வைத்து ஆராய்ச்சி செய்தது என்பது போன்ற 'சதி கதைகள்' பல உலவும் நிலையில், தலைமை விஞ்ஞானியே இப்படி அறிவித்திருப்பது விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக நம்பும் முகாம், இப்போது, 'நாங்க அப்பவே சொல்லல?' என்று ஹை பைவ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012


ஜோதிட சாஸ்திரத்தைப் பார்க்கும்போது முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்பது அனைத்தும் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது லக்னாதிபதி யாருடன் சேர்ந்திருக்கிறார், யாருடைய பார்வை பெற்றிருக்கிறது என்பதை வைத்து அவர் முற்பிறப்பில் என்னவாக இருந்திருப்பார், இந்த பிறவியில் அவரது செயல் எவ்வாறு இருக்கும் என்பதை அறியலாம்.

மேலும், ஏழேழு ஜென்மம் என்பதும் உண்டு. அணு ஜென்மம், கிரி ஜென்மம், புனர் ஜென்மம் என்பதும் உண்டு. லக்னாதிபதியை வைத்து அவரது மறுபிறவிகளை அறியலாம்.

பொதுவாக 12ஆம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை. மோட்சக் காரகன் கேது. 12ஆம் இடம் மோட்சத்திற்குரிய இடம். மோட்ச ஸ்தானத்தில் மோட்சக் காரகன் இருந்தால் மறுபிறவிக் கடலை நீந்தி மோட்சத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 12வது இடத்தில் கேது இருந்தாலோ அல்லது 12க்குரியவன் 12ம் இடத்திலேயே இருந்தாலும் மறுபிறவி இல்லை.

5ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. 5ஆம் இடத்தை வைத்தும் முப்பிறவி, அடுத்த பிறவியைப் பற்றி அறியலாம்.

அதாவது லக்னாதிபதி எந்த கிரகத்தில் இருக்கிறது, லக்னாதிபதியை எந்த கிரகம் பார்க்கிறது, லக்னாதிபதியின் பார்வை எந்த கிரகத்தின் மீது இருக்கிறது என்பதை கணித்தால் அவர்களது முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு பற்றி கணித்துவிடலாம்.

இந்தப் பிறவியில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முற்பிறவியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.

வியாழன், 26 ஏப்ரல், 2012


இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை.

கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது.

கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.

இந்து மதத்துக்கே உரியதான இத் தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வணிகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

ஆதிகால கிரேக்க சமய மரபுகள் (Greek Gnosticism) இந்து சமய நம்பிக்கைகளை ஒத்திருக்கக் காணப்படுகின்றன.

எம்பிடொக்கில்ஸ், பைதகொறஸ் போன்ற பேரறிஞர்கள் மறுபிறப்புத் தத்துவத்தை மக்கள் மத்தியில் கூறிவந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து பிளாட்டோவும் மறுபிறப்பு நம்பிக்கையை வலியுறுத்தினார்.
யூதர்களின் வழிகாட்டியும், அவர்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஆரம்ப வித்திட்டவருமான மோசஸ் பரப்பிய “கபாலா” தத்துவம் மறுபிறப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் பின்னால் வந்த “மிஷ்னா”, “தல்முட்” என்ற யூத போதனைகளில் இத்தத்துவம் ஏனோ வலியுறுத்தப்படவில்லை.

ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் மறுபிறப்பு நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
கி.பி. 538 – ம் ஆண்டின் கான்ஸ்டான்ட்டினோபிளில் நடைபெற்ற மகாநாட்டில் (Council of Constantinople) தான் முதல் தடவையாக ஜஸ்ரீனியன் என்ற பேரரசன் மறுபிறப்பில் நம்பிக்கை வைப்பது திருச்சபைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல் (Anathema) என்று சட்ட மூலமாகப் பிரகடனப்படுத்தினான்.

இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.

“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………” 

(ஆதாரம் The mystics of Islam by Reynold.A Nicholson).
இப்பாடல் மாணிக்கவாசக சுவாமிகளின் பின்வரும் திருவாசகத்தை நினைவுறுத்துகிறது.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவாராயத் தேவராய்ச்
செல்லா அநின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லா பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்”.

மனிதன் முக்தியடையும்வரை அவனுடைய ஆத்மா பிறப்பெடுத்துக்கொண்டேயிருக்கு
ம் என்று இந்து சமயம் புகட்டுகிறது.

கி.மு. 5 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கசரித்திர ஆசிரியர் ஹெறோடொற்றஸ் (Herodotus) என்பவர் “எகிப்தியர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாயிருந்தனர் மனிதனின் ஆத்மா அழிவற்றது. மனிதன் இறந்தவுடன் இன்னொரு உடலினுள் அவனுடைய ஆத்மா புகுந்து விடுகிறது என்று நம்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

அலெக்சாந்திரியாவின் கிளமேந்து என்னும் போப்பாண்டவர் (2ம் நூற்றாண்டு) அதேகாலத்துப் பேரறிஞர் ஓறிஜின் ஆகியோரும் மறுபிறப்பு தத்துவத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

ஜெருசலத்தில் பிரம்மாண்டமான தேவாலயத்தை நிறுவிய இஸ்ரவேல் நாட்டின் புகழ்பெற்ற மன்னன் சொலமன் (கி.மு 970 – 933) வெளியிட்ட “அறிவுக்களஞ்சியம்”  (book of wisdom) என்ற தனது நூலில் “நான் நல்லவனாயிருந்ததால் எனது ஆத்மா ஒருநல்ல உடலில் புகுந்து கொண்டது” என்று கூறியுள்ளார்.

மேற்கு நாட்டு அறிஞர்கள் பலர் மறுபிறப்பில் தமக்கு உண்டான நம்பிக்கையை தங்கள் நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த Samuel Alexander (1859 – 1939) பிறான்ஸ் தேசத்தைச் சேர்ந்த Henri Bergson (1859 – 1941) ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பேரறிஞர் எமேர்சனும் (1803 – 82) மறுபிறப்புத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டாக்டர் இவான்ஸ் வென்ஸ் (Dr. Evans Ventz) ஒரு ஞான ஆராய்ச்சியாளர். இவர் 1958ம் ஆண்டு இலங்கை வானொலியில் உரையாற்றிய பொழுது, “இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞானிகள் மறு பிறப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்” என்று கூறினார்.

இன்றைய சமுதாயம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்ந்தறிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமுடையது. இருந்தும் இறப்புக்குப் பின் ஏதோவொரு வகையில் மனித வாழ்வு தொடர்கின்றது என்ற நம்பிக்கை இப்போது உலக மக்கள் மத்தியில் பரவலாக நிலை பெற்றுவிட்டது.

கடவுளை நம்புகிறவர்களுக்கு கர்மாவிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
முற்பிறப்பு நினைவுகள்.

எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும்.

மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.

முற்பிறப்பு அனுபவங்கள் எமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் எம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன.
கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு முந்திய பிறப்புக்களின் அனுபவங்கள் பிரதிபலிப்பதுண்டு. ஆகாயத்தில் பறந்து செல்வது போல் நாம் கனவு காண்பது நாங்கள் பறவைகளாக இருந்த முற்பிறப்புக்களின் அனுபவங்களே.

முற்பிறப்பு ஞாபகங்கள் இயல்பாக எமக்கு இருப்பதில்லை. ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் ஒரு நிலையில் இருந்து முற்பிறப்புகளை அறியலாம். புத்தர் பெருமான் “அங்குத்தற நிக்காயா”வில் இந்த யோகநிலையை எப்படி பெறுவது என்று தனது சீடர்களுக்கு விளக்கியுள்ளார்.

அறிதுயில் நிலையில் பின்னோக்கிச் சென்று (Hypnotic Regression) முற்பிறப்புக்களை அறிதல் சாத்தியம் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அறிதுயில் நிபுணர் (Hypnotist) தனது மனோசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள நபரின் ஞாபகச் சக்தியை தான் விரும்புவது போல் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செலுத்தித் தகவல்களைப் பெறுவார்.
இப்படியான ஒரு ஆய்வின்போது அமெரிக்காவைச் சேர்ந்த பிறைடி மேர்பி (Bridey Murphy)என்னும் பெண்மணி அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முற்பிறப்பை நினைவு கூர்ந்து அதன் முழு விபரங்களையும் தெரிவித்தார். அவர் தனது முற்பிறப்பு நிகழ்ந்ததாகக் கூறிய ஆண்டு அண்மைய காலமாயிருந்ததனால் தேவாலய பதிவேடுகள், அரசாங்க எழுத்துக் குறிப்புகள் மூலம் அவருடைய கூற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்திலும் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டு மறுபிறப்புக்கு ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவில் கென்ரக்கி என்னும் நகரில் வாழ்ந்த எட்கர் கைஸ் (Edger Cayce) என்பவர் அறிதுயில் நிலையில் இருந்துகொண்டு மனிதர்களுடைய நோய்களைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் கூறுவார். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுடைய நோய்களுக்கு அவர்களுடைய முற்பிறப்பு “கர்மா” தான் காரணம் என்றுஅறிதுயில் நிலையில் இருந்து கொண்டு கூறினார். அவருக்குச் சுயநினைவு வந்தவுடன் “கர்மா” என்றால் என்ன என்று அவரிடம் கேட்டபொழுது அப்படியான ஒரு பதத்தை தான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். தனது முற்பிறப்பின் அறிவையும் ஆற்றலையுமே அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு வெளிப்படுத்தினார் என்று தெரிகிறது.
தியானத்தை வழிபாட்டு முறையாகக் கொண்ட இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மத்தியில் தான் மற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் கிடைத்த முற்பிறப்பு ஞாபகங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் உள ஆய்வியல்துறைப் பேராசிரியர் ஐயன் ஸ்ரீவன்சன் என்பவராலும் பிறான்கிஸ் ஸ்ரோறி என்பவராலும் ஆய்வு செய்யப்பட்டன.

இவைகளில் இருபது முற்பிறப்பு சம்பவங்கள் ஆய்வுக்குறிப்புகளின் ஆதாரங்களுடன் “fate” என்னும் சஞ்சிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளன.

புதன், 11 ஏப்ரல், 2012

சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.


சுனாமி சொல்லிலக்கணம்

சுனாமி என்பது சப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள் சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது குளம் போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி உண்மையில் அலைகள் இல்லை, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில், இத்தொடர் அறிவியல் சமூகத்தில் பயனிழந்து உள்ளது. பொதுவாக பிரபலமான வார்த்தைகள் அதன் தோற்றத்தை வைத்து பெயரிடப்பபடுகிறது. இங்கு "பேரலை" என்பது ஒரு நம்ப முடியாத உயர்அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கி செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.

‘அலை' என்ற வார்த்தைக்கு “போல" அல்லது “அதே தன்மை கொண்ட என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன்" புலூக் என்பர்[1]. “அலோன்" என்ற வார்த்தைக்கு பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்" என்றும் சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைப்பர்.

வரலாறு

கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாண்டிரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755 ஆம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.

2. 1883 ஆம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

3. அதன் பின்னர் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964 ஆம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரித்தானிய கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் நாடு தான். 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம்.2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது.

 

உற்பத்தி முறைகள்

சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணம். மிக அரிதாக சில நேரங்களில் விண்கற்கள் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை.

*  கடலாழத்தில் ஏற்படும் எந்தப் பாதிப்பின் போதும் வரும்.
* கடலாழ பூகம்பத்தினால் வரும்.
* கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
* மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
* வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
* கடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.


அதிர்வினால் உருவாக்கப்பட்ட சுனாமி

கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் சுனாமி உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்கான் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. சுனாமிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. சுனாமியின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும். ஏப்ரல் 1946, அலாஸ்காவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாஸ்கா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்விக்கு சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஹைட்ரேட் வெளியானது(மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004ல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். ஜப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது.

நிலச்சரிவுகளால் உருவாக்கப்பட்ட சுனாமி

1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை “சியோருக்கஸ்" என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958ல் மிகப்பெரிய நிலச்சரிவு, அலாஸ்காவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது. இந்த அலை உடனடியாக நிலத்தை அடைந்து விட்டதால் நீண்ட தூரம் பயணிக்கவிலை. இதில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் மற்றொரு படகு அதிசயமாக அந்த அலையில் சவாரி செய்து கரையை அடைந்தது. விஞ்ஞானிகள் இந்த அலைகளை “மெகா சுனாமிகள்" என்று அழைத்தனர். அறிவியலாளர்கள் எரிமலை தீவின் இடிந்து விழும் மிகப் பெரிய நிலச்சரிவுகளால் மிகப்பெரிய, ஒரு பெருங்கடலையே கடக்கக் கூடிய மிகப் பெரிய “மெகா சுனாமியை” உருவாக்க முடியும் என்றனர்.

பண்புகள்

சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை “துறைமுக அலை” என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிகாக உயரும். இதை “ரன்” என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது.

 








குறைகள்

சுனாமியின் குறைபாடு என்னவென்றால் ஒரு அலை முகடு கரையை அடைவதைவிட தொட்டி போன்ற பகுதி முதலில் அடையும். இதனால் கடற்கரைளை ஒட்டி சாதாரணமாக மூழ்கி இருக்கும் இடங்கள் வெளிக்கொணரப்படுகிறது. அலை தொட்டி போன்ற பகுதிக்கு வெளிப்புறமாக நீரில் பரவுகிறது. அலை நேரத்தின் பாதி அளவு நேரத்திலேயே அலைகள் தோன்றுகின்றது. சில நேரங்களில் ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது கடல்படுகையில் உள்ள மீனைப்பிடிக்கும் ஆர்வத்திலோ உள்ள மக்கள் இந்த ஆபத்துகளை உணர முடியாமல் போகிறது.

செறிவு மற்றும் அளவு மாறுபாடு

பூகம்பங்களைப் போல சுனாமியின் செறிவு மற்றும் அளவு மாறுபாடுகளை ஒப்பீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுனாமி அடர்த்தியை அளவிட சீபெர்க்-அம்பரசி என்னும் அளவுகோல் மத்திய தரைக் கடலிலும், இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் பயன்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் சோலோவைவ் என்பவரால் சூத்திரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு ஹாவ் அருகிலுள்ள கடற்கரை சராசரி அலை உயரம் உடையது. இந்த அளவுகோல் சோலோவ்-இமாமுரா சுனாமி செறிவு அளவுகோல் எனப்படுகிறது. இந்த அளவு, சுனாமி அளவாக நோவோசிப்ரிஸ்க் சுனாமி ஆய்வகம் தொகுக்கப்பட்ட உலக சுனாமிப் பட்டியல்களில் பயன்படுத்தப்படுகிறது.

பரும அளவுகள்

உண்மையில் சுனாமி அளவைக் காட்டிலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை முர்த்தி மற்றும் லூமிஸ் இருவரும் எம் எல் என்ற அளவிளில் சுனாமியின் இயக்க ஆற்றலை கணக்கிடப்பட்டனர். ஆபே என்பவர் சுனாமியின் அளவுகோளாக மவுண்ட் என்பதை அறிமுகப்படுத்தினார். h என்பது சுனாமியின் அதிக பட்ச அலை வீச்சு.

சுனாமி எச்சரிக்கை அமைப்பு

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1 அன்று ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949 ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960 ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.

அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசிபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

பாடசாலைச் செல்லும் ஒரு வேடுவக் குழந்தைவேடுவர் என்போர் இலங்கை காடுகளின் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.

இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார். [2]

இலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அன்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகளும் உள்ளன.

பேசும் மொழி

தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்"[ஆதாரம் தேவை] அல்லது "காட்டில் வாழ்பவர்கள்"[ஆதாரம் தேவை] என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார். [3]


வரலாறு

1890களில் எடுக்கப்பட்ட படம்
இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.

இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர்.


ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம்.

பின்பற்றுபவர்கள்