amutha malai polikirathu

புதன், 31 அக்டோபர், 2012


ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
இவை ஒரு புறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, “மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்” என்ற வரையறையையும் தாண்டி கணவன்- மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன், மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்து கொண்டு வாழும்போது தான் தம்பதியர் வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும்.
மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக,
பிரேசில் நாட்டு மாணவி, ( 20 வயது) தனது கற்பை இணைய தளத்தில், ஏலம் விட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்தவர் 4.5 கோடிக்கு இந்த பெண்ணின் கற்பை ஏலம் எடுத்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த, உடற்பயிற்சி கல்லூரி மாணவி, கட்டாரினா மிக்ளியோரினி, 20. இவர் சமீபத்தில், தனது கற்பை ஏலம் விடப்போவதாக இணைய தளத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்போவதாக, தனது ஏல அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தியர் ருத்ர சாட்டர்ஜி, ஜப்பானை சேர்ந்த நாட்சு உள்பட 15 பேர், கட்டாரினாவின் கற்புக்கு ஏலம் கோரியிருந்தனர். ஆனால், ஜப்பான் நாட்டுக்காரர் நாட்சு, அதிக பட்சமாக, 4.5 கோடி ரூபாய்க்கு, கற்பை ஏலம் எடுத்தார். இந்த தொகைக்கு ஈடுகொடுக்க முடியாத ருத்ர சாட்டர்ஜி உள்ளிட்டோர், பின் வாங்கி விட்டனர்.
நாட்சு, விலை பேசி விட்டதால், அவரிடம் முறைப்படி, கட்டாரினா, தனது கற்பை ஒப்படைக்க உள்ளார். இதற்காக நாட்சுக்கு விமானம் ஒன்றை அனுப்பி அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ரகசியமான இடத்தில் “கற்பு’ ஒப்படைக்கப்பட உள்ளது.இதில் குறிப்பிடதக்க விடயம் என்னவெனில் 20 வயதுக் கன்னியுடன் உறவு வைக்க 1030 மில்லியன் ரூபாவுடன் போட்டிக்கு வந்த இந்தியர்!

திங்கள், 29 அக்டோபர், 2012

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.

வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012


முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
ஒரு நெல்லிக்கனியில் 482.14  என்னும் அதிக சக்தி வாய்ந்த  ஆண்டி ஆக்ஸிடேட்  என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

காத‌லி‌க்கத் தொட‌ங்‌கிய நேர‌த்‌தி‌ல் ‌நிறைய மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவா‌ர்க‌ள். ஆனா‌ல் பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ளி‌ன் பே‌ச்‌சி‌ல், அவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை ‌விட, அவ‌ர்களது குடு‌ம்ப‌ம், ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ள்ள, த‌ங்களை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை‌ப் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம். ஆனா‌ல், த‌ன்னை‌ப் ப‌ற்‌றியு‌ம், தன‌க்கு‌ நெரு‌ங்‌கியவ‌ர்க‌ள் ப‌‌ற்‌றிய ரக‌சிய‌ங்களையு‌ம் சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அவ‌சியமு‌ம் இ‌ல்லை.

வியாழன், 26 ஜூலை, 2012

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.
படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?
1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.
2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.
இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.
அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கூந்தலை வளர்ச்சியடையும்.


உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ‘வாட்டர் பேஸ்ட் மேக்கப்’ போட்டுக் கொள்ளுங்கள். ஓயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மாற்றம் செய்ய முடியாமல் இருக்கிறதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.

பின்பற்றுபவர்கள்