amutha malai polikirathu

திங்கள், 22 ஏப்ரல், 2013


பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும். 



உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும்.  வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


புதன், 10 ஏப்ரல், 2013


காதல் செய்யும் பெண்களிடம், உங்கள் துணைவர் அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வார்களா? என்று கேட்டால், பெரும்பாலான பெண்கள் இல்லை என்று தான் சொல்வார்கள்.
ஏனெனில் காதல் செய்வதற்கு முன், பெண்கள் காதலை ஒப்புக் கொள்ளும் வரை அடிக்கடி சொல்லும் ஆண்கள், காதலை பெண்கள் ஒப்புக் கொண்ட பின்னர் சொல்வதில்லை. இவையே பெரும்பாலான காதல் செய்யும் பெண்களின் பிரச்சனை.
பொதுவாக ஆண்களுக்கு அடிக்கடி, மூன்று வார்த்தையை சொல்லப் பிடிக்காது. அவ்வாறு அடிக்கடி சொல்லாவிட்டால், உடனே அவர்களுக்கு பாசம் இல்லை, தமக்கு சரியானவர் இல்லை என்று தவறாக நினைக்கக் கூடாது. ஆகவே அந்த மாதிரி அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’என்று சொல்லாமல் இருப்பதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளன. அத்தகைய காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
* ஆண்களுக்கு பெண்களைப் போன்று எதையும் சரியாக வெளிப்படுத்த தெரியாது. உண்மையில் சில ஆண்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் பெண்கள் கேட்காமலேயே நிறைய வெளிப்படுத்துவதால், அவர்கள் ஆண்களிடம் நிறைய எதிர்பார்ப்பதோடு, அவை நடக்கவில்லை என்றதும், உடனே கோபப்பட்டு சண்டைப் போடுகிறார்கள்.
* ஆண்களைப் பொறுத்த வரை, அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொன்னால் மட்டும் தான், காதல் உள்ளதாக அர்த்தமா என்று எண்ணுவார்கள். ஆண்களைப் பொறுத்த வரை, ஒரு முறை அந்த மூன்று வார்த்தையை சொன்னாலும், இதயத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே தான் அவர்கள் அடிக்கடி சொல்வதில்லை.

திங்கள், 25 மார்ச், 2013

வாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.
குளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும்.
தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.
வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.
கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.
கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.
உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி. அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால் ஆரோக்கியம் அரவணைக்கும்.

புதன், 13 மார்ச், 2013


அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
ஆறுதலாய் பேசுங்கள்
பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.
நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.
காதல் இதயத்தில் இருந்து வருகிறதா? அது மூளை தொடர்புடையதா என்று ஒரு ஆராய்ச்சி நடந்து வரும் வேலையில் காதலித்தால் அது இதயத்தை பாதுகாக்கிறது. இதயநோய்கள் ஏற்படாமல் காதல் தடுக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
இதயநோய் வராது
திருமணம் மூலம் ஏற்படும் குடும்ப உறவு, தம்பதியருக்கிடையே ஏற்படும் அந்நியோன்யமான தாம்பத்யம் இதயநோய்களை தடுக்கிறது என்று பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்பான உறவு மூலம் கிடைக்கும் நேசம் பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்கிறதாம் இதனால் இதயநோய் ஏற்படுவது குறைகிறது என்கின்றார் கொல்கத்தாவில் பிஎம். பிர்லா இதய ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் அனில் மிஸ்ரா.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
காதல் நினைவுகளும், காதல் உணர்வுகளுமே நம்மை உயிர்போடு வைத்திருக்குமாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் எந்த நோயும் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.
இது தொடர்பாக 112 கல்லூரி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காதலில் இருந்த மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தது தெரியவந்தது. இதேபோல் தம் துணையுடன் வாரம் இரண்டுநாள் உறவில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
மூளை உற்சாகமடையும்
காதலித்துப் பாருங்களேன். மனதில் எப்போதும் உற்சாகம் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும். புதிதாய் பிறந்ததைப் போல உணர்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். நம் இன்ப துன்பத்தில் பங்கு கொண்டு நம் நலனில் அக்கறை கொள்ள நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே உற்சாகப்படுத்தும். துன்பம் வரும் நேரத்தில் சாய ஒரு தோள் கிடைத்திருக்கிறது என்ற எண்ணமே நோய், நொடி எதுவும் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
மனதை மயக்கும் சிவப்பு
பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.
உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.
ஆண்களை கவரும் பெண்கள்
பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது.
ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து பாலூட்டிகளுக்கும் முன்பு தோன்றிய மூதாதையர் யார்? என்ற சர்ச்சை பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது. இதுகுறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் லாங்ஐலேண்டில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக் கழக முதல்வர் மவுரீன் ஏ ஒலேரி தலைமையிலான குழு ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கிடைத்த ஒரு விலங்கின் எலும்பு கூட்டை வைத்து ஆராய்ச்சி செய்தனர். எலி போன்ற சிறிய அளவிலான இந்த விலங்கு மனிதர்கள் உள்பட பாலூட்டும் வகையை சேர்ந்த 5400 இனங்களின் மூதாதையராக இருந்திருக்க வேண்டும். பாலூட்டி இனத்தின் முதல் உயிரினம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என கண்டறிந்தனர்.
இதன் எடை சுமார் 225 கிராம் (அரை பவுண்டு) மட்டுமே இருந்துள்ளது. இவை 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும். பருவகால மாற்றத்துக்கு ஏற்ப டயனோசரஸ்களுக்கு பிறகு இவையும் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த விலங்குகள் வாழ்ந்த காலத்தில் மிகவும் அமைதியாக அதே நேரத்தில் பரபரப்பாக சுற்றி திரிந்திருக்க வேண்டும். அதன் உடல் அமைப்பு வாட்ட சாட்டமாக இருந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இத் தகவல் ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பின்பற்றுபவர்கள்