amutha malai polikirathu

திங்கள், 9 ஏப்ரல், 2012

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.

இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.
5. Windows 7/Vista பயனாளிகள்
  • Control Panel ->Date, Time, Language, and Regional Options–> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.
  • Change keyboards… என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.
  • Language Bar க்கு வரவும்.
  •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.
  • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.
6.Windows XP பயனாளிகள்
  • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.
  • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.
  • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.
  • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.


8. இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.


9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:
Amma – அம்மா, 
karpom – கற்போம் 


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

நன்றி  www.karpom.com




சில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு.


இதன் சிறப்பம்சங்களை காண்போம்.

1. 200 க்கு அதிகமான ஆடியோ, வீடியோ வகைகளை ஏற்றுக் கொள்கிறது.

2. ஆன்லைனில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. Youtube, Facebook, Vimeo, Dailymotion என 50 தளங்களில் இருந்து செய்ய முடியும். என்ன Output Format வேண்டும் என்றாலும் நீங்கள் தெரிவு செய்ய ம்டுயும்.

3. மிக சிறந்த Output Format களை தருவது இதன் மிகப் பெரிய சிறப்பு. இப்போது வந்துள்ள HTML 5 வரை Update செய்து உள்ளார்கள்.

4.Android, iPhone போன்ற Smartphone-களை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அதற்கென்றே தனி Output வசதிகள் இதில் உள்ளது.அத்தோடு Sony PSP, PS2, PS3, BlackBerry, Samsung, Nokia, Xbox, Apple TV, என பல வகையும் இதில் அடக்கம்.

5. வசதிகள் எல்லாம் சரி, இதன் வேகம் எப்படி என்று கேக்குறீங்களா? மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.

6. சாதாரண வீடியோ வை BluRay வீடியோ ஆக மாற்றும் வசதியும் உள்ளது இதில். வீடியோ கொடுத்து Bluray DVD-யை போட்டு விட்டு Convert கொடுத்தால் வேலை முடிந்தது.

7.சாதாரண DVD-க்கும் அதிக பட்சம் 40 மணி நேரம் வரை ஓடும் Video-களை Write செய்ய இயலும்.

8. ஒரு வீடியோவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது ஒரு பாடலில் சில பகுதி மட்டும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கும் Editor Tool இதில் உள்ளது. உங்கள் வீடியோவை இதில் Add செய்த பின் அதன் வலது புறத்தில் தோன்றும் Play/கத்தரிக்கோல் போன்றதை கிளிக் செய்தால் கீழே உள்ள புதிய பகுதி வரும்.

முதலில் வீடியோவை Play செய்து Starting Point, பின்னர் End Point தெரிவு செய்து கொண்டு Cut Button கொடுத்தால் நீங்கள் தெரிவு செய்த பகுதி நீக்கப்பட்டு விடும். (எது வேண்டாமோ அதை நீக்க இதை பயன்படுத்தவும்.) இப்போது Ok கொடுத்தால் வேலை முடிந்தது. பின்னர் Convert செய்து விடுங்கள்.

9. உங்கள் படங்கள், பாடல்கள், போன்றவற்றை Youtube க்கு Upload செய்யும் வசதியும் இதில் உள்ளது. எத்தனை படங்கள் வேண்டுமோ அத்தனையும் போட்டு பின்னர் மேலே வீடியோவுக்கு சொன்னது போல வலது புறம் உள்ள Play பட்டனை கிளிக் செய்தல் வரும் Editor Window-வில் உங்களுக்கு தேவையான மாற்றம் செய்யலாம், பின்னணியில் ஏதேனும் பாடலை சேர்க்க விரும்பினால் Editor பகுதியில் Audio Track None என்பதை கிளிக் செய்து பின்னர் கணினியில் Browse செய்து பாடலை சேர்க்கவும்.

10. Audio இருக்கு அதை வீடியோ ஆக்க வேண்டுமா? பாடலை Add செய்யும் Play செய்யுங்கள், கொடுத்துள்ள பல Visualization-களில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் அல்லது ஏதேனும் ஒரு படத்தை கூட சேர்க்கலாம்.

11. மேலும் வீடியோ தலைகீழாக இருந்தால் அதை Rotate செய்யும் வசதி, உங்களுக்கு ஏற்ற Output Presets, Aspect Ratio மாற்றும் வசதி என பல அருமையான வசதிகளை கொண்டுள்ளது இந்த Freemake Video Converter.

12. இன்னொரு மிகப் பெரிய வசதி நீங்கள் Windows XP பயனர் என்றால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திறக்க நிறைய மென்பொருட்கள் அனுமதிப்பது இல்லை. ஆனால் Freemake அதை தந்து உள்ளது.
அதனால் தான் இது வெறும் Converter மட்டும் இல்லை என்று சொன்னேன். இலவசம் என்றாலும் போதும் போதும் என்கிற மட்டும் தரும் மிக அருமையான ஒரு மென்பொருள் இது.
தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம்.

உதடுகளில் வெடிப்பு

அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

உதடுகள் மென்மையாக

வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் தரவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தரலாம். வாரம் மூன்றுநாட்களுக்கு இவ்வாறு செய்து வர உதடுகள் ரோஜா பூ நிறத்திற்கு மாறுவதோடு மென்மையாகும்.

வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில் உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும்.
தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.

மென்மையான உதடுகள்

வீட்டில் உள்ள பொருட்களே உதடுகளை அழகாக்க பயன்படுகின்றன. வெண்ணெய் அல்லது நெய்யை தினசரி உதடுகளில் தடவி வர உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு பாதம் பவுடர், சிறிதளவு பாலடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும்.

பாதம் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்க்கவும். தினசரி இதனை தேய்க்க உதடுகள் மென்மையாகும்.
தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமானது, ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் தாம்பத்ய உறவை விரும்ப மகிழ்ச்சியைத் தவிர்த்து பல்வேறு காரணங்கள் இருக்கிறதாம். எந்தெந்த காரணத்திற்காக அவர்கள் உறவை விரும்புகின்றனர் என்று உளவியல் நிபுணர்கள் பட்டியல் இட்டுள்ளனர். படித்துப் பாருங்களேன்.

தாம்பத்ய உறவானது உடல் தொடர்புடையது மட்டுமல்ல மனது தொடர்பானதும் கூட. 30 நிமிட சந்தோசத்தில் சுரக்கும் காதல் ஹார்மோன்களினால் மன அழுத்தம் பறந்து போகிறது. உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மகிழ்ச்சியான மனநிலை

உறவின் மூலம் முதற்கட்டமாக பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதாம். தன்னுடைய வாழ்க்கைத் துணைவருடனான உடல் ரீதியான உறவை மிகவும் அனுபவித்து ஈடுபடுகின்றனராம். இதற்காகவே அவர்கள் செக்ஸினை விரும்புகின்றனராம்.

மன அழுத்தம் போகும்

தாம்பத்ய உறவின் மூலம் மனஅழுத்தம் நீங்குகிறதாம். எத்தனை கடினமான வேலை செய்து விட்டு உடல் களைப்போடு வந்தாலும் துணைவருடனான உறவில் ஈடுபட்டால் எல்லாமே பறந்து போகிறதாம். களைப்பு நீங்கி நன்றாக உறக்கம் வருகிறதாம்.

எடை குறைகிறது

செக்ஸ் ஒரு சிறந்த எக்ஸர்சைஸ் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய துணைவருடனான உறவின் மூலம் உடலில் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதனால் தாம்பத்ய உறவை மகிழ்ச்சியுடன் விரும்புகிறேன் என்கின்றனர் பெண்கள்.

போர் அடித்தால்

தாம்பத்ய உறவானது துணைவருடனான காதல் பிணைப்பை அதிகரிக்கிறது. இதனால் வாழ்க்கையில் போர் அடிக்காது. தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சின்ன பிணக்குகளை நீக்குகிறது என்கின்றனர்.
இத்தகைய காரணங்களுக்காகவே பெண்கள் தாம்பத்ய உறவை விரும்புகின்றனராம். உங்க கதை எப்படி? இதோட கொஞ்சமாவது ஒத்துவருதா?

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.

பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4.இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்த வுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்க வும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

7. வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் கவுன்டியில் உள்ள டட்லி நகரை சேர்ந்தவர் கய்லி ஹட்ஜ்சன் (25). இவருக்கு கடந்த 2005ல் குழந்தை பிறந்தது. இரட்டைக் குழந்தை. இரண்டும் பெண் குழந்தை.
அக்கா ரெமீ பளிச்சென்ற பால் வண்ணத்தில் செக்கச்செவேல் என்று இருக்கிறாள். சுண்டிவிட்டால் ரத்தம் வரும். அவ்ளோ சிவப்பு. தங்கை கியான் அப்படியே உல்டா. கன்னங்கரேல் நிறம். பிறந்தபோதே, ‘பிளாக் அண்ட் ஒயிட் சகோதரிகள்’ என்று இங்கிலாந்து பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின.
குழந்தைகளுக்கு இப்போது 7 வயது. பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். வெளியூர்வாசிகள் இப்போதும் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
கய்லி ஹட்ஜ்சன், அவரது கணவர் ஹார்டர் இருவருமே வெள்ளை. இருவரின் அம்மாக்களும் வெள்ளை. அப்பாக்கள் மட்டும் கருப்பு. குடும்பத்தின் இந்த கலர் விளையாட்டுதான் குழந்தைகளை பிளாக் அண்ட் ஒயிட்டாக படைத்திருக்கிறது என்கின்றனர் டாக்டர்கள்.
இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘வெள்ளை, கருப்பு தம்பதிக்கு எந்த நிறத்திலும் குழந்தைகள் பிறக்கலாம். பெண்ணின் முட்டை, ஆண் விந்தணு இரண்டிலும் வெள்ளை தோல் ஜீன் இருந்தால் வெள்ளை குழந்தை பிறக்கும். ஒன்று கருப்பாக இருந்தாலோ, இரண்டும் கருப்பாக இருந்தாலோ கருப்பு குழந்தை பிறக்கும். இரட்டை குழந்தையில் ஒன்று வெள்ளையாகவும் இன்னொன்று கருப்பாகவும் பிறக்கும் சாத்தியக்கூறு 10 லட்சத்தில் ஒன்று’’ என்றனர்.
கய்லி தற்போது கணவனை பிரிந்து வாழ்கிறார். இரு குழந்தைகளும் கய்லியிடம்தான் வளர்கின்றன. இதுபற்றி கய்லி கூறியதாவது:
இரட்டை குழந்தை என்பது முன்கூட்டியே தெரியும். பிளாக் அண்ட் ஒயிட் என்பது பிறந்த பிறகுதான் தெரிந்தது. இருவரும் ரொம்ப பாசமாக பழகுகிறார்கள். பாட்டு, நடனத்தில் இருவருக்கும் ஆர்வம் அதிகம். கியானுக்கு விலங்குகள் என்றால் உயிர். ரெமீக்கு சமையலில் விருப்பம். நானும் சரி, அவர்களும் சரி, நிறத்தை பெரிதாக நினைப்பதில்லை. என்னை பொருத்தவரை இருவரும் சமம்தான். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. இருவரும் பிறந்த பிறகு பேசிய முதல் வார்த்தை ‘ஜூஸ்’ என்பதுதான். சில நேரம் இவள் தும்மினால், அவளும் தும்முவாள். பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். இவ்வாறு கய்லி கூறினார்.
7வது பிறந்தநாள் கொண்டாட உள்ள பிளாக் அண்ட் ஒயிட் சகோதரிகளுக்கு இமெயிலில் வாழ்த்துகள் குவிகிறதாம்.
இலங்கையின் இயற்கைச்செல்வம் சிங்கராஜவனம்


மரங்கள் வெட்டப்பட்டு,காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை வளம் அருகி வரும் இவ்வேளையில், இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே வனமான சிங்கராஜ வனம் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.

 
சுற்றாடல் இயற்கை வள அமைச்சின் கீழுள்ள இலங்கை வனத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் சிங்கராஜவனம் மனிதத்தலையீடுகள் மிகக் குறைந்த வனமாகவும் தாழ்நில மழைக்காடாகவும் விளங்குகின்றது. இலங்கையின் அரும்பெரும் இயற்கைச்செல்வங்களே ஒன்றாகிய இது மனித உயிர்க் கோள ஒதுக்கிடமாக 1978ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.1988 ஆம் ஆண்டில் இவ்வனம் உலக மரபுரிமை தளமாக  க்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

27,643 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வனம் கிழக்கு மேற்காக சுமார் 21 கிலோமீற்றர் நீளமும் வடக்கு தெற்காக 3.7 கிலோமீற்றர் அகலமும் கொண்டது. இவ்வனம் இரத்தினபுரி மாவட்டத்தால் உரிமை கோரப்பட்டாலும் காலி, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வியாபித்துள்ளது. சிங்கராஜ வனத்தை கலவான,றக்வான, கனிதும, தெனியாய ஆகிய நான்கு கிராமங்களுக்கூடாகவும் சென்றடையலாம்.
                                                                               

இவ்வனப்பிரதேசத்தின் வருடாற்த சராசரி வெப்பநிலை 23.6 பாகை செல்சியஸ் ஆகும். அதனால், வருடம் முழுவதும் வறட்சிக்காலமில்லாமல் இருப்பதே இப்பிரதேசத்தின் சிறப்பம்சமாகும்இவ்வனத்தின் தரைப்பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 200 மீற்றர் முதல் 1300 மீற்றர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜ வனத்திலுள்ள மிக உயர்ந்த மலைச் சிகரமாக சுமார் 1150 மீற்றர் உயரமான கினிப்பிட்டி கலயைக் கூறலாம்.

இது தவிர, திப்பொத்கல ,மவுலவெல்ல, கொஸ்குலான , சிங்ககல, கொகிலரம்ப, தொட்டலுகல போன்ற சிகரங்களும்  இவ்வனத்தினுள் காணப்படுகின்றன. களுகங்கையின் கிளை நதியும் ஜின கங்கையின் கிளை நதியும் இம்மலைத்தொடர்களை ஊடறுத்துப் பாய்வது இதன் அடுத்த அம்சமாகும்.

இவ்வனத்தில் உள்ள அதிகமகன மரங்கள் உயரமாகவும் நேராகவும் வளர்ந்து காணப்படுகின்றன. இம்மரங்கள் 35 மீற்றர் முதல் 50 மீற்றர் வரை உயரமும் கொண்டவை. இவ்வனத்தில் இனங்காணப்பட்டுள்ள 211 வகையான மர இனங்களில் 66% மரங்கள் இலங்கைக்கே உரிய மரங்களாகும். அத்துடன்,25 வகையான இலங்கைக்கே உரிய தாவர வகைகளில் 13 வகைகள் சிங்கராஜ வன்த்தில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

சுதேச பறவையினங்களில் 95% சிங்கரகஜ வனத்தில் காணப்படுகின்றன. இவ்வனத்தில் ‘சாம்பூ’ இன மான்கள் அதிகமாக வாழ்கின்றன. சுண்டெலி மானகளும் குரைக்கும் மான்களும் காணப்படுகின்றன. ஊதாமுக இலைக்குரங்குகள், விரியன் பாம்புகளும் இவ்வனத்தில் ஆங்காங்கே நடமாடுகின்றன. தவளைகள், தேரைகள் என்பன இங்குள்ள அருவிகளிலும் சேற்று நிலங்களிலும் சுதந்திரமாக, இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்கின்நன.

இவ்வனத்தில் தாவர அடர்த்தி மிகக் குறைவாகவே காணப்படுவதால் இங்கு மிருகங்களும் பறவைகளும் மிக இலகுவாகவும் சுதந்திரமாகவும் நடமாட முடிகின்றது. சிங்கராஜ வனத்தைச் சுற்றி சுமார் 22 கிராமங்கள் காணப்பட்ட போதிலும், வருகந்தேனிய, கொலந்தொட்டுவ ஆகிய கிராமங்கள் வனத்திற்குட்பட்டே காணப்படுவது வனத்தின் தனித்துவத்தைப் பாதிப்பதாக அமைகின்றது.    

பின்பற்றுபவர்கள்