amutha malai polikirathu

வியாழன், 13 மார்ச், 2014


உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும்.




எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி. ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ்களை தமிழ் போல்டு ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.

எலுமிச்சை ஜூஸ்

தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்

தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்

பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

செவ்வாய், 14 மே, 2013

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு


பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.
தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம் அதிகரிக்குமாம்.

ரத்த ஓட்டம் சீராகும்
செக்ஸ் உறவின் கிளைமேக்ஸில் பெண்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் உணர்வுகளால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

குணமடையும் இதயநோய்கள்
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு நன்மைகள் பல ஏற்படுகிறது.

சனி, 4 மே, 2013

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மிகவும் குழம்பியிருக்கிறார்கள். பலதரப்பட்ட கருத்துகள், முடிவு எடுக்கத் தெரியாத ஒரு நிலை. இவை எல்லாம் குழப்பத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது, எப்படி அணுகுவது, யாருடைய கருத்தை நாடுவது என்று தடுமாற்றம். கடைசியில் எதையோ தேர்ந்தெடுத்து வேறு வழியில்லாமல் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. கலாசாரம் என்ற பெயரில் சிறு வயதிலிருந்தே அவர்களை முடிவு எடுக்க விடுவதேயில்லை. ஒரு மாணவன் சார்பில் எப்பொழுதும் முடிவுகளை எடுப்பது தாய், தந்தையர் (அ) ஆசிரியர்கள் (அ) குடும்பத்திற்குத் தெரிந்த ஓர் அனுபவஸ்தர். சுயமாகத் தனக்கு என்ன வேண்டுமென்று முடிவு எடுக்கத் தெரியாததாலேயே குழப்பம் மென்மேலும் மேலோங்கி நிற்கிறது.

ஒரு காலகட்டத்தில் அரசு வேலை () வங்கி வேலையே சிறந்தது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணம் ஒருமுறை வேலையில் சேர்ந்தால் ஓய்வு பெறும்வரை பிரச்சினைகள் கிடையாது. திருமணத்துக்குக் கூட இது ஒரு முக்கியமான தகுதியாக இருந்தது. மேலும் சொந்தத் தொழில் செய்தவர்கள் எல்லோரும் ஒரு பின்னணியை நம்பி வாழ்ந்தவர்கள். வாய்ப்புகள் இருந்தன. ஆனால் குறைவு.

இன்றைக்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஏராளமான துறைகள். எவ்வளவு துறைகள் இருந்தாலும் ஒரு நிறுவனத்துக்குத் தூண் போல் நிற்பது மார்கெட்டிங் துறையே. இத் துறை இல்லாத நிறுவனமே கிடையாது.
மார்க்கெட்டிங் என்பது வெறும் பொருள்களை விற்பது மட்டுமல்ல. அது ஒரு Behavior. மனிதர்களை உறவு வகையில் பொருள்களுடன் இணைக்கிறது. நாம் பிறந்த நிமிஷத்திலிருந்து நாம் நம்மை மார்க்கெட் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எல்லா காலகட்டத்திலேயும் நம்மை மார்க்கெட் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பொருளை நாம் நம்முடன் சேர்ந்து மார்க்கெட் செய்யும்பொழுது அது மேம்பட்டு நிற்கிறது.

வியாழன், 25 ஏப்ரல், 2013

இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலாத  ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது.
நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விடயமாக மட்டுமில்லாமல் அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.
அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுதுபோக்குகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.
புத்தகம் படிப்பது
புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
யோகாசனம்
தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும்.

திங்கள், 22 ஏப்ரல், 2013


பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும். 



உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும்.  வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


புதன், 10 ஏப்ரல், 2013


காதல் செய்யும் பெண்களிடம், உங்கள் துணைவர் அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வார்களா? என்று கேட்டால், பெரும்பாலான பெண்கள் இல்லை என்று தான் சொல்வார்கள்.
ஏனெனில் காதல் செய்வதற்கு முன், பெண்கள் காதலை ஒப்புக் கொள்ளும் வரை அடிக்கடி சொல்லும் ஆண்கள், காதலை பெண்கள் ஒப்புக் கொண்ட பின்னர் சொல்வதில்லை. இவையே பெரும்பாலான காதல் செய்யும் பெண்களின் பிரச்சனை.
பொதுவாக ஆண்களுக்கு அடிக்கடி, மூன்று வார்த்தையை சொல்லப் பிடிக்காது. அவ்வாறு அடிக்கடி சொல்லாவிட்டால், உடனே அவர்களுக்கு பாசம் இல்லை, தமக்கு சரியானவர் இல்லை என்று தவறாக நினைக்கக் கூடாது. ஆகவே அந்த மாதிரி அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’என்று சொல்லாமல் இருப்பதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளன. அத்தகைய காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
* ஆண்களுக்கு பெண்களைப் போன்று எதையும் சரியாக வெளிப்படுத்த தெரியாது. உண்மையில் சில ஆண்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் பெண்கள் கேட்காமலேயே நிறைய வெளிப்படுத்துவதால், அவர்கள் ஆண்களிடம் நிறைய எதிர்பார்ப்பதோடு, அவை நடக்கவில்லை என்றதும், உடனே கோபப்பட்டு சண்டைப் போடுகிறார்கள்.
* ஆண்களைப் பொறுத்த வரை, அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொன்னால் மட்டும் தான், காதல் உள்ளதாக அர்த்தமா என்று எண்ணுவார்கள். ஆண்களைப் பொறுத்த வரை, ஒரு முறை அந்த மூன்று வார்த்தையை சொன்னாலும், இதயத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே தான் அவர்கள் அடிக்கடி சொல்வதில்லை.

பின்பற்றுபவர்கள்