ஆரோக்கியமான வழியில்
உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
திங்கள், 8 பிப்ரவரி, 2016
7:27 PM
Amutham
ஞாயிறு, 24 ஜனவரி, 2016
2:47 PM
Amutham
இது ஓர் பூர்வசென்ம பந்தம்:- அன்னபூரணிப் பாய்க்கப்பல் இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்க ளுக்கு முன்பு நுழைந்த துறைமுகம் உள்ள மாநிலத்திற்கும் (மசாசுசெட்ஸ்) ஈழத்தமிழருக்கும் அதன்பின்னர் 1980களில் இருந்த தொடர்புகளையும் நாமும், உலகும் அறியும். நிறத்தால், குலத்தால், மொழியால் சமயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள் வாழும் மாநில அரசவையில் ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை அறிந்து சுதந்திரத்தை இழந்த மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர் கூட்டணித் தலைவர் அண்ணன் சிவசிதம்பரம் அவர்களை வரவழைத்து அடையாளமாக அதன் தீர்மான திறப்பை வழங்கினார்கள். அதன்பின்னர் தான் உலகநாடுகள் இமைகளை இடுக்கியாவது ஈழத்தைப் பார்க்க ஆரம்பித்தன. இந்தப் பரிவுக் கும் அன்னபூரணி அந்த மாநிலத்தே நுழைந்த முன்நிகழ்வுக்கும் இடையில் ஏதோ ஓர் பூர்வசென்ம பந்தம் உள்ளதோ எனத் தோன்றுகின்றது.
அன்னபூரணியின் மேற்கத்திய பயணம் :- 'இன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்குள், நான் பிறந்து வளர்ந்த நாட்டில் வாழ் ஈழத்தமிழர்களுக்கு பெரும்பான்மை இனத்தவரால் பெரும் துன்பம் ஏற்பட இருக்கிறது. அப்போது நீவிர்தான் அவர்களுக்குப் புகலிடம் தரவேண்டும்". என்ற வேண்டுகோளை முன்பாகவே உன்னிடம் சமர்ப்பிக்க வந்துள்ளேன் என்பது போலவே அன்று தனது பாய்களை இறக்கிவைத்து வணக்கம் செய்தாளோ வேம்புடல் கொண்ட அன்னபூரணி அன்னை என்று கற்பனை செய்தாலும் அது முற்றுப்பெற்ற உண்மை என்பதை இன்று உணர்கின்றோம். பிறந்த கத்திற்கு புகழ் தேடித்தந்த அன்னபூரணி முழுத்தமிழினத்திற்கும்; இலங்கைக்கும் புகழ் தேடித்தந்த தமிழர்தம் கடலாளுமையை விளக்கும் அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்து வந்துள்ளாள். அன்னபூரணி குளோசெஸ்டர் துறைமுகத்தில் நுழைந்ததும் அந்த நிகழ்வு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொஸ்டன் குளோப் என்னும் நாளிதழ் 1938ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் தினத்தன்று (அப்போது அதன்விலை 2 சதம்கள்) வெளியிட்ட செய்தியின் தலைப்பு: பிறிகன்ரைன் முடித்த கடல் பயணம் இலங்கையில் இருந்து வந்த அற்புதமான நிகழ்ச்சி கடல் பயணத்தைப் பற்றிய அரிய தகவல்கள். எழுதுவது: நாற் ஏ.வறோஸ்.
89அடி நீளமான புளோரன்ஸ் சி றொபின்சன் என்னும் பிறிகன்ரைன் ரக (அன்னபூரணியின் புதிய பெயர்) பாய்கப்பல் ஒன்று குளொசெஸ்டர் துறைமுகத்தை அண்மித்து நங்கூரம் இட்டு உள்ளது.
- அன்னபூரணி பாய்க்கப்பலின் நிழற்படத்துடனான வருகை பற்றிய செய்தி
- அன்னபூரணிப்பாய்க்கப்பல் யாருக்காகயாரால் வல்வெட்டித்துறையிலிருந்து தருவிக்கப்பட்டதோ அவரது வரலாறு.
- அன்னபூரணியை இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் ஆகிய இரு சமுத்திரங்களுடா கவும், அவற்றுக்கு இடைப்பட்ட வங்கக்கடல், அரபுக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல், பேர்மி யூடாக்கடல், ஆகிய கடல்களுக்கூடாகவும் செலுத்திவந்த திறனும், விறலும் மிக்கவல்வெட்டித் துறைக் கப்பலோட்டிகள் பற்றியது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆங்கிலேயரிடம் இருந்து சுதேச கப்பல் வணிகத்தை ஆரம்பித்த சம காலத்தில் வல்வெட்டித்துறையில் கட்டிய அன்னபூரணியை அமெரிக்கர் ஒருவர் கொள்வனவு செய்ததையும், அதைத் தனது நாட்டிற்குக் கொண்டு சென்றதையும் ஒப்பிட்டுப் பார்த் தால் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் மிகமிகக் கெட்டிக்காரர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சாகரம் கடல்கடந்தாய் - வாழி அன்னபூரணி
உசாத்துணை நூல்கள்:-
- ஈழத்துப் பூராடனாரின் 'வல்வெட்டித்துறைக் கடலோடிகள்"
- 'வல்வெட்டித்துறையின் வரலாறு" வித்துவான் வ.மு.கனகசுந்தரம்.
- 'வல்வெட்டித்துறை ஊரின்னிசை" திரு.பூ.க.முத்துக்குமாரசாமி, திரு.செ.வைத்தியலிங்கம்பிள்ளை.
- 'வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டியதமிழர்கள்" திரு.நு.மு.இராஜகோபால்.
- 1974 தமிழாராய்ச்சி மாநாடு அன்னபூரணி ஊர்தி பவனி விசேட மலர்.
- 'வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" வல்வை ந.நகுலசிகாமணி. 2ம் பதிப்பு 2006.
- 'வரலாற்றில் வல்வெட்டித்துறை" திரு.பா.மீனாட்சிசுந்தரம், திரு.ந.சீவரத்தினம்.
- 'Daily Times" August 2nd 1938.
- Reopening of a North Ceylon port, page 8 to 20
திங்கள், 13 ஏப்ரல், 2015
7:25 AM
Amutham
பேர்முடா முக்கோண வலயம் எனக் கூறப்படும் இந்த கடல்பரப்பானது ஏறத்தாள 500000 தொடக்கம் 1.5 மில்லியன் பரப்பளவு உடையது. அது மட்டுமல்லாது இது வடஅமெரிக்காவின் தென் பகுதியை அண்மித்த புளோரிடாவையும் அதிலிருந்து தென்மேற்காக போட்டோரிக்கோ மற்றும் தென்கிழக்காக பேர்முடா தீவு என்பனவற்றையே எல்லைகளாகக் கொண்டுள்ளது. இவை வெறும் கற்பனை எல்லைகளாகும். இவ்வாறு உலகினை உலுக்கிய பல சம்பவங்களை தன்னகத்தே கொண்ட பேர்முடா முக்கோண வலயமானது இன்றுவரைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது என்பது மறுக்கவோ, மறக்கவோ முடியாத ஒரு விடயமாகும்.
7:11 AM
Amutham
வியாழன், 13 மார்ச், 2014
8:16 AM
Amutham
செவ்வாய், 14 மே, 2013
1:22 AM
Amutham
மனதை மயக்கும் சிவப்பு
12:21 AM
Amutham
குணமடையும் இதயநோய்கள்










