ஜிமெயில் மின்னஞ்சல்களை Track செய்வதற்கு
ஜிமெயிலில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை Track செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.
இதற்கு முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து, உலாவியில் நிறுவிக் கொள்ளவும்.
இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலாவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது.
இந்த நீட்சியை நிறுவிய உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும்.
மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த மின்னஞ்சலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.
http://www.youtube.com/watch?v=7vFavmoa2yA&feature=player_embedded
11:22 PM
Amutham
Posted in
0 comments :
கருத்துரையிடுக