amutha malai polikirathu

புதன், 13 மார்ச், 2013


மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து பாலூட்டிகளுக்கும் முன்பு தோன்றிய மூதாதையர் யார்? என்ற சர்ச்சை பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது. இதுகுறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் லாங்ஐலேண்டில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக் கழக முதல்வர் மவுரீன் ஏ ஒலேரி தலைமையிலான குழு ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கிடைத்த ஒரு விலங்கின் எலும்பு கூட்டை வைத்து ஆராய்ச்சி செய்தனர். எலி போன்ற சிறிய அளவிலான இந்த விலங்கு மனிதர்கள் உள்பட பாலூட்டும் வகையை சேர்ந்த 5400 இனங்களின் மூதாதையராக இருந்திருக்க வேண்டும். பாலூட்டி இனத்தின் முதல் உயிரினம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என கண்டறிந்தனர்.
இதன் எடை சுமார் 225 கிராம் (அரை பவுண்டு) மட்டுமே இருந்துள்ளது. இவை 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும். பருவகால மாற்றத்துக்கு ஏற்ப டயனோசரஸ்களுக்கு பிறகு இவையும் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த விலங்குகள் வாழ்ந்த காலத்தில் மிகவும் அமைதியாக அதே நேரத்தில் பரபரப்பாக சுற்றி திரிந்திருக்க வேண்டும். அதன் உடல் அமைப்பு வாட்ட சாட்டமாக இருந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இத் தகவல் ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்