amutha malai polikirathu

புதன், 31 அக்டோபர், 2012

சமூக வலைத்தளங்களின் மூலம் இலகுவில் மோசடியில் சிக்குபவர்கள் ஆண்கள் தானாம். பெண்கள் இந்த மாதிரி விடயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாம்.

இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர். இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
மற்றும் அமெரிக்காவில் 1,649  பேரளவில் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட இலகுவில் செக்ஸுக்கு மயங்குவார்கள். கிடைக்கும் ஒவ்வொரு பந்துக்கும் சிக்ஸர் அடிக்க துடிக்கும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு மேலும் விவரிக்கிறது.
ஒரு சில பெண்களுக்கும் இதே செக்ஸ் குறை காரணியாக இருக்கிறது. இவர்களையும் இலகுவாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும்.
facebook பாவிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம்.
ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக சொருவப்படுகின்றன.
 இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசிய விடயங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள் தனமானது.
கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.

0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்